தமிழக சட்டசபை தேர்தல் நெருங்குவதை ஒட்டி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பொங்கலுக்கு 2500 ரூபாய் பரிசு உள்ளிட்ட பல்வேறு அதிரடி திட்டங்களை அறிவித்து மக்களை திணறடித்து வருகிறார்.
அதன் ஒருபகுதியாக கல்லூரி மாணவர்களுக்கு தினமும் 2 ஜி.பி இண்டர்நெட் டேட்டா இலவசம் என அறிவித்துள்ளார். “கல்லூரி மாணவர்களுக்கு ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை தினமும் 2 ஜி.பி டேட்டா இலவசமாக வழங்கப்படும். இணையவழி வகுப்புகளில் மாணவர்கள் கலந்துகொள்ள ஏதுவாக நாள் ஒன்றுக்கு 2 ஜிபி டேட்டா வழங்கப்படும். அரசு கல்லூரிகள், கல்வி உதவித் தொகை பெறும் சுயநிதி கல்லூரிகளில் பயிலும் 9 லட்சத்து 69 ஆயிரத்து 47 மாணவர்கள் இதன்மூல. பயன்பெறுவார்கள்” என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்