அயோத்தி ராமர் கோயில் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா கடந்த வருடம் நடந்து முடிந்தது. இந்த நிலையில் ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகளுக்காக நிதி தேவைப்படுவதாக தெரிவித்துள்ளனர் ராமர் கோவில் கட்டுமான அமைப்பினர்.மேலும் கட்டுமான பணிகளை தீவிரமாக்க ஒரு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
அதன்படி ராமர் கோயில் கட்டுவதற்கு நிதி திரட்டுவதற்கான பிரச்சார இயக்கத்தில் நடிகர் அக்ஷய் குமார் இணைந்துள்ளார்.தனது சமூக வலைத்தள ரசிகர்களைப் பயன்படுத்தி உதவி புரிவதாக அவர் திட்டமிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்.
“அயோத்தியில் நம்முடைய பிரம்மாண்டமான ஸ்ரீ ராம் கோயிலின் கட்டுமானப் பணிகள் தொடங்கியிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இப்போது நம்மால் முடிந்த பங்களிப்பை ராமர் கோயிலுக்கு செய்வோம். நான் இதில்இணைந்துள்ளேன். நீங்களும் இதில் இணைந்து பங்களிப்பு செய்வீர்கள் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.