இந்திய ராணுவத்தில் பைக் ஆம்புலன்ஸ் அறிமுகம்!
மோதல்கள், போர் காலங்களில் காயம் ஏற்பட்ட ராணுவ வீரர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காப்பாற்றும் விதமாக பைக் ஆம்புலன்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மத்திய ரிசர்வ் போலீஸ் படை, அணுசக்தி மருத்துவ மையம், பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் ஆகியவை இணைந்து இந்த பைக் ஆம்புலன்சை உருவாக்கி உள்ளன. பாதுகாப்பு படையினருக்கு அவசர மருத்துவ வசதி தேவைப்பட்டாலோ அல்லது மோதல் நடைபெறும் இடங்களில் காயமடையும் வீரர்களை காக்கவோ இந்த ஆம்புலன்ஸ்கள் பயன்படும் என்று ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த பைக் ஆம்புலன்ஸை ஒருவர் ஓட்டும் விதமாகவும், காயம்பட்டவரை பாதுகாப்பாக அமர வைத்து அழைத்துச் செல்ல சிறப்பு இருக்கையும் அமைக்கப்பட்டுள்ளது. இன்று முதல் பைக் ஆம்புலன்ஸ் சேவை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.