இந்தியாவின் முதல் ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரயில் சேவையை தலைநகர் தில்லியில் 37 இலோ மீட்டர் தூரம் கொண்ட ‘மெஜந்தா’ வழித்தடத்தில் துவங்கப்பட்டது. இதைக் காணொலி மூலம் துவங்கிவைத்த பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், ‘’2014 ஆம் ஆண்டு நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது மெட்ரோ ரயில் சேவை நாட்டில் 5 நகரங்களில் மட்டுமே இருந்தது. இப்போது அது 18 நகரங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. நமது அரசு நகரமயமாக்கலை சவாலாக பார்க்காமல் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டதுடன் உள்கட்டமைப்பையும் உருவாக்கி மக்களின் வாழ்க்கையையும் எளிதாக்கியுள்ளது.
2014 ஆம் ஆண்டு 5 நகரங்களில் 248 கிலோ மீட்டர் தூரத்திற்கு மட்டுமே இருந்த மெட்ரோ ரயில் சேவை இன்று 18 நகரங்களில் 700 கிலோ மீட்டருக்கு விரிவடைந்துள்ளது. 2025 ஆம் ஆண்டுக்குள் மேலும் ஏழு நகரங்களில் புதிதாக டெட்ரோ ரயில்சேவையைத் தொடங்கி, மொத்தம் 1700 கிலோ மீட்டர் தூரத்திற்கு இத்திட்டத்தை விரிவுபடுத்த மத்திய அரசு முனைப்பு கொண்டுள்ளது.’எனவும் தெரிவித்தார்.