இன்று சர்வதேச இடம்பெயர்வோர் தினம்
உலகளவில் இடம் பெயர்ந்தவர்களுக்குரிய, மனித உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி டிசம்பர் 18 ஆம் தேதி ஆண்டுதோறும் சர்வதேச இடம்பெயர்வோர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
சமூகம், பொருளாதாரம் மற்றும் கலாசாரத்தில் அனைத்து நபர்களும் முன்னேறுவதற்குரிய வழிமுறைகளை அனைத்து நாடுகளும் செயல்படுத்த வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும். உலக அளவில் 21 கோடி பேர் இடம்பெயர்ந்தவராக உள்ளனர் எனஒரு ஆய்வு தெரிவிக்கிறது. இதில் 49 சதவீதம் பேர் பெண்கள். இவர்கள் உலக மக்கள்தொகையில் ஐந்தாவது இடத்தில் உள்ளனர்.
இடம்பெயர்வோர் என்றால் அது, ‘சொந்த நாட்டில் வாழ முடியாத நிலைமையுடைய தஞ்சம் கேட்டோ, அகதியாகவோ, இன்னொரு நாட்டுக்கு விருப்பப்பட்டோ, கட்டாயத்தின் பேரிலோ இடம் பெயர்ந்தவர்களை குறிக்கிறது’. இதைத் தவிர உள்நாட்டிலேயே தங்கள் தேவைக்கேற்ப இடம்பெயர்வோரும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.