38 அணிகள் பங்கேற்கும் முஸ்டாக் அலி முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற ஜனவரி 10ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடக்க உள்ளது.
இதில் கலந்துகொள்ளும் அணிகள் ஆறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. லீக் ஆட்டங்கள் பெங்களூரு, கொல்கத்தா,சென்னை, மும்பை, உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடக்க உள்ளது. இந்த போட்டியில் தமிழக அணி பி பிரிவில் இடம் பிடித்துள்ளது. இந்த பிரிவுக்கான லீக் ஆட்டங்கள் கொல்கத்தாவில் நடக்க உள்ளது. இந்த போட்டிக்கான தமிழக கிரிக்கெட் அணியை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நேற்று அறிவித்துள்ளது. அணியில் தினேஷ் கார்த்திக் கேப்டனாக இடம் பிடித்துள்ளார்.