கேரள மாநிலம் திருவனந்தபுரம் நாவாயிக்குளம் பகுதியை சேர்ந்தவர் சபீர் (36 ). ஆட்டோ ஓட்டுனரான இவரது மனைவி ரெஜீனா. இவர்களுக்கு அல்தாப்(12), அன்ஷாத்(9) என இரண்டு மகன்கள் இருந்தனர்.
சபீருடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் ரெஜீனா தனது. சகோதரனின் வீட்டுக்கு குழந்தைகளுடன் சென்றாள். ஆனாலும் சபீர் அங்குசென்று குழந்தைகளை அடிக்கடி வெளியே அழைத்து சென்று வந்துள்ளார். மனைவி பிரிந்திருப்பதால் மன உளைச்சலுடன் காணப்பட்டுள்ளார். இந்த நிலையில் கடந்த புத்தாண்டு அன்று இரண்டு மகன்களையும் ஆட்டோவில் கூட்டிச் சென்ற சபீர் அவர்களுடன் பீச், ஓட்டல் என சுற்றியிருக்கிறார்.
பின்னர் மகன்களை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். மூத்தமகனை கட்டிப்போட்டு கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். பின்னர் இரண்டாவது மகனை வீட்டின் அருகில் உள்ள குளத்தில் வீசி எறிந்துவிட்டு, சபீரும் குளத்தில் குதித்து தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.