தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் 10 மற்தும் 12-ம் வகுப்புகள் திறப்பது குறித்து ஜனவரி 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை பெற்றோர்களிடம் கருத்து கோரப்பட்டது. பெரும்பான்மையான பெற்றோர்கள், பள்ளிகளைத் திறக்க தங்கள் இசைவினை அளித்துள்ளதாக 95 சதவீத பள்ளிகள் அறிக்கை அளித்துள்ளன. எனவே மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு மட்டும் வரும் 19-ம் தேதி முதல் வகுப்புகள் திறக்கப்படும்.
ஒரு வகுப்பறையில் 25 மாணவர்களுக்கு மிகாமல் செயல்படவும், அரசு காட்டும் வழிகாட்டி நெறிமுறைக்கு உட்பட்டு செயல்பட அனுமதிக்கப்படுகிறது. பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு விடுதிகள் செயல்படவும் அனுமதிக்கப்படுகிறது. அனைத்து மாணவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஏதுவாக, வைட்டமின் மற்றும் துத்தநாக மாத்திரைகள் வழங்கவும் சுகாதாரத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.