17 வயது பெண் வீட்டில் தனியாக இருந்தபோது அவரின் உறவினர்களில் சிலர் அவரை பலாத்காரம் செய்து தூக்கில் தொங்கவிட்ட கொடுமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானாவில் சிர்சா மாவட்டத்தில் உள்ள தங்களது வீட்டில் 17 வயதான இளம்பெண் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார் . வீட்டிற்கு பக்கத்திலேயே அவர்களுக்கு சொந்தமான கடை இருப்பதால் அவரின் உறவினர்கள் அனைவரும் அந்த கடைக்கு வந்து போவது பழக்கமாக இருந்துள்ளது.
அப்படி கடைக்குவந்த உறவுக்காரர்களில் சிலர் வீட்டுக்கு வந்துள்ளனர். அப்போது அந்த ஆண் உறவினர்கள் அந்தப் பெண்ணிடம் பாத்ரூம் போகவேண்டும் என்று கூறியுள்ளார்கள். அதைக்கேட்டு அந்தப் பெண் அவர்கள் வீட்டிற்கு உள்ளே சென்று பாத்ரூமை காண்பித்துள்ளார் அப்போது அவரின் பின்னாடியே சென்ற ஆண் உறவினர்கள் சிலர் அந்த இளம்பெண்ணை துள்ளத், துடிக்க பலாத்காரம் செய்துள்ளனர். தொடர்ந்து இந்த விஷயம் வெளியே தெரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக அந்தப் பெண்ணை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது போல செய்து விட்டு தப்பித்துவிட்டார்கள்.
பின்னர் அருகே கடையில் இருந்து வீட்டுக்குத் திரும்பிய அவரின் தந்தை வீட்டிற்குள் வந்து பார்த்தபோது அவருடைய மகள் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.பின்னர் இந்த விஷயம் பற்றி அவர் போலீசில் புகார் அளித்துள்ளார் போலீஸ்காரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த தொடங்கியுள்ளனர் அப்போது அந்த பெண்ணின் உறவினர்கள் அந்தப் பெண்ணை பலாத்காரம் செய்துவிட்டு கொலை செய்த விவகாரம் தெரிந்து அவர்களை கைது செய்துள்ளனர். தற்போது இந்த சம்பவம் அங்கு சுற்றியுள்ள மக்களுக்கு பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.