மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரயில்வே ரோடு பகுதியை சேர்ந்தவர் தன்ராஜ் சவுத்ரி. இவர் தர்மகுளத்தில் நகைக்கடை மற்றும் நகை அடகு கடை வைத்து நடத்தி வருகிறார். இன்று காலை தன்ராஜ் சவுத்ரி மற்றும் அவரது மனைவி ஆஷா (48), மகன் அகில் (25), மருமகள் நிகில் (24) ஆகியோர் தூங்கிக்கொண்டிருந்தனர். காலை 6.30 மணிக்கு அவரது வீட்டுக் கதவை தட்டிய மர்ம நபர்கள் ஹிந்தியில் அவரை அழைத்துள்ளனர்.
அவர் கதவை திறந்ததும் அத்துமீறி வீட்டிற்குள் புகுந்த அந்த நபர்கள், ஆஷா மற்றும் அகிலை அரிவாளால் வெட்டி கொலஒ செய்தனர். மேலும் நிகிலும் தாக்கிவிட்டு வீட்டில் இருந்த 16 கிலோ தங்க நகைகள், சி.சி.டி.வி கேமரா காட்சிகள் பதிவான ஹார்ட் டிஸ்க், சிடி உள்ளிட்டவைகளையும் கொள்ளையடித்துவிட்டு, அந்த வீட்டில் நின்ற காரில் தப்பிச் சென்றனர். இதுகுறித்து தகவலின்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி, சீர்காழி அருகே உள்ள பட்ட விளாகம் பகுதியில் கார் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் சீர்காழி அருகே உள்ள எருக்கூர் பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக நின்ற வடமாநில இளைஞர்கள் மீது சந்தேகம் அடைந்த போலீஸார் அவர்களை பிடித்து விசாராணை நடத்தினர். அதில், அவர்கள் பெயர் மணீஷ், மணிபால், ரமேஷ் எனவும், கொள்ளை, கொலை ஆகியவற்றில் அவர்கள் ஈடுபட்டதையும் ஒப்புக்கொண்டனர். மேலும் மணிபால் என்பவன் கொள்ளையடித்த நகையை பதுக்கி வைத்த இடத்தை அடையாளம்காட்டுவதாக கூறினார். அவரை மயிலாடுதுறை டிஎஸ்பி அண்ணாதுரை அழைத்து சென்றார். அப்போது மணிபால் தப்பிச் செல்ல முயன்றபோது அவரை போலீஸார் துப்பாக்கியால் சுட்டு என்கவுண்டர் செய்தனர். இந்த என்கவுண்டர் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்துள்ளது.