வருகின்ற தேர்தலில் திமுக அரசு ஆட்சியை அமைந்தவுடன் மக்களின் குறைகள் எல்லாம் 100 நாட்களில் தீர்ந்துவிடும் என உறுதி அளித்திருக்கிறார் ஸ்டாலின். உங்கள் மனுக்களுக்கு நான் பொறுப்பு’ என்ற புதிய உறுதியையும் அவர் மக்கள் மன்றத்துக்கு கொடுத்துள்ளார். 100 நாட்கள் அவகாசம் மட்டும் எனக்குத் தாருங்கள் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், திமுக ஆட்சி அமைந்தவுடன் மக்களின் கோரிக்கை மனுக்களை பரிசீலிப்பதற்காகவே தனித்துறை உருவாக்கப்படும் எனக் கூறியுள்ளார். திமுக தொண்டர்கள் இந்த புதிய திட்டத்தினை வரவேற்றுள்ளனர்.இவ்வாறு ஸ்டாலின் தற்பொழுது உள்ள வாக்காளர்களின் மனதில் குடியேற பல்வேறு யுத்திகளை கையாண்டு கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.