படிக்கும் மாணவ மாணவியர் ஒரு வருடமாக வீட்டிலிருந்தபடியே காலத்தை கழித்து வருகின்றனர். இன்னும் அவர்கள் வீட்டிலேயே இருந்தால் அவர்களுக்கும் போரடித்து விடும் வீட்டில் இருப்பவர்களுக்கும் போரடித்து விடும்.
தற்பொழுது கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஏற்பட்ட பயம் நீங்கி கொஞ்சம் தைரியமாக மக்கள் நடமாடி வருகின்றனர். பள்ளிக்கல்வித்துறை எனவே பள்ளிகளை திறக்க முடிவு செய்துள்ளது.இருப்பினும் அவர்கள் அவ்வளவு பாடத்தை எப்படி படிப்பார்கள் என அனைவரும் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதன் காரணமாக 10,12ம் வகுப்புகளுக்கு 40 சதவீதம் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் 10,12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பாடங்கள் குறைக்கப்படுவதாக பள்ளி கல்விதுறை தெரிவித்துள்ளது.தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறப்பதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகளில் தீவிரமாக பள்ளிக்கல்வித்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.மாணவர்களே சென்று வாருங்கள் வென்று வாருங்கள். அதேபோல் மாணவர்கள் விரும்பினால், பெற்றோர் சம்மதித்தால் மட்டும் பள்ளிக்கூடத்துக்கு வந்தால் போதும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.