சினிமா துறையினரை கரோனா காலம் ரொம்பவே பாடாய்படுத்திவிட்டது. இந்த கரோனா காலத்தில் பட வாய்ப்பு இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் இந்த கரோனா காலத்தில் சிகிட்சைக்கு பணம் இன்றி தவித்த தவசி, அங்காடித்தெரு பட நடிகை சிந்து, சிறுநீரகப் பாதிப்பில் அவதிப்பட்ட பொன்னம்பலம் என பலரையும் பார்த்தோம்.
அந்த வரிசையில் நகைச்சுவை நடிகர் பெஞ்சமினும் இப்போது தவித்து வருகிறார். வெற்றிக்கொடிகட்டு படத்தில் வடிவேலை திட்டும் காட்சியில் பிரபலம் ஆனார். ஆட்டோகிராப் படத்தில் சேரனுக்கு நண்பனாக வருவார். இதேபோல் திருப்பாச்சி படத்தில் விஜய்க்கு நண்பனாகவும் நடித்தார். இப்போது ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு பாதிக்கப்பட்டிருக்கும் பெஞ்சமின் சேலத்தில் உள்ள ஆஸ்பத்திரி ஒன்றில் சிகிட்ட்சை பெற்றார். தொடர்ந்து பெங்களூரில் ஒரு ஆஸ்பத்திரிக்கு சிகிட்சைக்குப் போய் இருக்கிறார். ஆனால் அவரிடம் சிகிட்சைக்கு போதிய பணம் இல்லை. இதனால் மருத்துவ உதவி செய்யக்கேட்டு அவரே உருக்கமாக பேசி வீடியோ வெளியிட்டுள்ளார்.