நடிகர் தனுஷ் நடிப்பில் தற்போது வெளியாகவுள்ள திரைப்படம்தான் கர்ணன் .இந்த படத்தின் டப்பிங் வேலை முடித்ததாக அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் போட்டுவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். விரைவில் படம் வெளியாக உள்ளதாக படக்குழுவினர் படத்தின் பிரமோஷன் வேலைகள் மற்றும் இறுதிக்கட்ட வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் படத்தின் இயக்குனரான மாரி செல்வராஜ் படத்தினைப் பற்றிய தகவல்களை பகிர்ந்துகொண்டார். ஏற்கனவே இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள் வெற்றியடைந்தால் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கர்ணன் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது .தற்போது படக்குழுவினர் படத்தின் பிரமோஷனுக்காக படத்தை பற்றிய தகவல்கள் மற்றும் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏற்றி வருகின்றனர். அந்த வகையில் தற்போது கர்ணன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. அந்த போஸ்டரில் தனுஷ் ஏதோ தவறு செய்து போலீசார் கைவிலங்கு போட்டிருப்பது போல் அமைக்கப்பட்டுள்ளது .இதனை பார்க்கும் போது ஜாதி சார்ந்த பிரச்னைக்காக போராடுவதால் போலீசாரால் கைது செய்யப்பட்டது போல் மாரிசெல்வராஜ் கதையை அமைத்திருக்கலாம் என்றும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இவர் இயக்கிய பரியேறும் பெருமாள் திரைப்படம் ஒரு குறிப்பிட்ட சாதியை மையமாக வைத்து நடித்த காட்சிகள் மூலம் தான் பிரபலமானது என்பது குறிப்பிடதக்கது.