ஹூவாய் நிறுவனமானது நவீன மடிக்கக்கூடிய ஸ்கிரீன் கொண்ட மேட் எக்ஸ்2 ஸ்மார்ட்போனை வரும் 22 ஆம் தேதி அறிமுகம் செய்யப்போவதாக அந்நிறுவனம் அறிவித்து இருக்கிறது. மேலும் முதற்கட்டமாக இந்த ஸ்மார்ட்போன் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த மொபைல் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த மேட் எக்ஸ்எஸ் மாடலின் மேம்பட்ட வெர்ஷனாகும். ஹூவாய் நிறுவனம் ஹூவாய் மேட் எக்ஸ்2 மாடலை தயாரிக்கவே மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனிற்கென சுமார் 100 காப்புரிமைகளை பெற்று இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதன் வரிசையில் புதிய மாடலில் கணிசமான மேம்படுத்தல்கள் செய்யப்பட்டு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹூவாய் மேட் எக்ஸ்2 ஸ்மார்ட்போன் 8.01 இன்ச்
2480×2200 பிக்சல் மெயின் டிஸ்ப்ளே, 6.45 இன்ச் 2700×1160 பிக்சல் இரண்டாவது ஸ்கிரீன் கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது. இதனுடன் 50 எம்பி பிரைமரி கேமரா, 16 எம்பி அல்ட்ரா வைடு, 12 எம்பி டெலிபோட்டோ கேமரா, 8 எம்பி டெலிபோட்டோ லென்ஸ்ம் வழங்கப்படுகிறது. இந்த மொபைலுக்கு சந்தையில் அதிக மவுசு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.