தமிழ் சினிமாவில் அதிக படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று ஒரு சில நடிகைகள் சோசியல் மீடியாவில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர். இதன் மூலம் சிலர் பட வாய்ப்புகளையும் தட்டிச் செல்கின்றனர். அந்த வகையில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட தொடங்கி உள்ளார் நடிகை பார்வதி நாயர் .
அபுதாபியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நடிகை பார்வதி நாயர் அஜித் நடிப்பில் வெளியான “என்னை அறிந்தால்” என்கிற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்தப் படத்தில் நடிகர் அருண் விஜய்க்கு மனைவியாக நடித்து இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பார்வதி நாயர் மலையாளம், கன்னடம், போன்ற மொழிகளிலும் நடித்து வருகிறார்.அது மட்டும் இல்லாமல் “என்னை அறிந்தால்” படத்திற்கு பின்னர் இவருக்கு அதிக படங்களில் நடிப்பதற்கு வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கிறது.
இதுவரை தமிழில் உத்தம வில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக, எங்கிட்ட மோதாதே, நிமிர், வெள்ள ராஜா, சீதகாதி, போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை அமைத்துக் கொண்டார். இந்தநிலையில் பார்வதி நாயர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் மிக ஆக்டிவ் ஆக இருக்கக்கூடியவர்.
அந்தவகையில் தற்போது அவருடைய சமூகவலைத்தள பக்கத்தில் பிறந்த நாள் கொண்டாடிய வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்த்துவிட்டு அவருடைய ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர். அதில் பார்வதிநாயர் தன்னுடைய பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது படு கவர்ச்சியாக உடை அணிந்துள்ளார். அது போக அந்த உடையில் பயங்கரமாக போஸ் கொடுத்து அதை எல்லாம் ஒரு வீடியோவாக தயார் செய்து அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் நடிகை பார்வதி நாயர். இதோ அந்த வீடியோ உங்களுக்காக…
https://www.instagram.com/p/CI0RDw6DyFP/?igshid=e69gywjpmuju