தமிழ் சினிமாவில் தற்போதைய பிசியான நடிகராக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் தனுஷ்.இவர் தற்போது தமிழில் ஜகமே தந்திரம், கர்ணன் போன்ற படங்களில் நடித்து முடித்துவிட்டு அடுத்ததாக இந்தியில் உருவாகி கொண்டிருக்கும் “அட்ராங்கி ரே” என்கிற திரைப்படத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து இயக்குனர் செல்வராகவன் உடன் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் தனுஷ். “ராட்சசன்” படத்தை இயக்கிய இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் ஒரு படம், கார்த்திக் நரேன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஒரு படத்திலும் நடிக்கவுள்ளார் அந்த வரிசையில் தற்போது இன்னொரு படமும் இணைந்துள்ளது. உலகப் புகழ்பெற்ற விளையாட்டு வீரர்களில் ஒருவரான வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிகர் தனுஷ் நடிக்கப் போவதாகவும், அந்த படத்தை தனுஷின் முந்தைய ஹிந்தி படங்களை இயக்கிய இயக்குனர் ஆன “ரஞ்சனா” மற்றும் “அட்ராங்கி ரே” படங்களை இயக்கிய ஆனந்த் எல் ராய் இயக்க உள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.
உலகப் புகழ்பெற்ற செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த். செஸ் போட்டிகளில் இவர் பெறாத பட்டமே கிடையாது.இந்த நிலையில் விஸ்வநாதன் ஆனந்த் வாழ்க்கை வரலாற்று படத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடிப்பில் கிரிக்கெட் வீரர் நடராஜன் வாழ்க்கை வரலாறு உருவாக இருக்கும் செய்தி தற்போது கோலிவுட் வட்டாரங்களில் மிக வைரலாக பேசப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து தனுஷும் ஒரு விளையாட்டு வீரர் வாழ்க்கையை நடிக்கிற செய்திகள் தற்போது கோலிவுட் வட்டாரங்களில் பெரும் பரவலாக பேசப்படுகிறது. சிவகார்த்திகேயன் மற்றும் தனுஷுக்கும் இடையே இருக்கும் வியாபாரப் போட்டியைப் பயன்படுத்தி யாரோ கிளப்பிவிட்டு இருப்பார்களா? என்று கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.