மோட்டோரோலா 90களின் காலம் முதல் தனக்கென தனித்துவமிக்க ஒரு நிறுவனமாக இருந்துவருகிறது.
மோட்டோரோலா நிறுவனம் விரைவில் கேப்ரி (Capri) மற்றும் கேப்ரி பிளஸ் (Capri Plus) என்ற இரண்டு பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இரண்டு போன்களின் தகவல்கள் தற்பொழுது இணையத்தில் கசிந்து பெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மோட்டோரோலா கேப்ரி ஸ்மார்ட்போன் XT2117 மாடல் என்ற எண்ணுடன் வருகிறது. இது எச்டி பிளஸ் ரெசல்யூஷன் 720 x 1600 பிக்சல்கள் மற்றும் 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் வரும். கேமராவைப் பொறுத்தவரையில் மோட்டோரோலா கேப்ரி 48 மெகாபிக்சல் பிரைமரி சாம்சங் லென்ஸ், 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் மற்றும் 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு லென்ஸ் உடன் தயாராகி இருக்கிறது.