தமிழ் சினிமாவில் மறக்க முடியாத காமெடி நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் கவுண்டமணி. இவரது நடிப்பில் வெளியான காமெடி காட்சிகள் அனைத்துமே இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது .கவுண்டமணி காமெடியனாக பல படங்களில் நடித்துள்ளார் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனால் வில்லனாக கிட்டத்தட்ட 8 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் .இவர் வில்லனாக நடித்து ரசிகர்களுக்கு நல்ல வரவேற்பைப் பெற்ற படங்கள் பட்டியல் தற்போது பார்க்கலாம்
ராஜாத்தி ரோஜாக்கிளி: நடிகர் சுரேஷ் நடிப்பில் உருவான திரைப்படம் ராஜாத்தி ரோஜாக்கிளி. இப்படத்தில் நளினி ,ராஜேஷ் மற்றும் செந்தில் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். காமெடி கதாபாத்திரத்தில் மட்டும் நடித்து வந்த கவுண்டமணி இந்த படத்தில் முதல்முறையாக வில்லனாக அறிமுகமானார்.வாழ பழுத்திருக்கு என்ற பாடலில் கவுண்டமணி அனுராதாவுடன் ஒரு கவர்ச்சி குத்தாட்டம் ஆடி இருப்பார்.
ஞானப்பழம்: பாக்யராஜ் நடிப்பில் உருவான திரைப்படம் தான் ஞானபழம். இந்த படத்தில் நடிகை சுகன்யா, வினிதா மற்றும் ரேகா போன்ற பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இந்த படத்தில் சுகன்யாவிற்கு அண்ணனாக நடிகர் கவுண்டமணி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றார்.
16 வயதினிலே: நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் 16 வயதினிலே .இந்த படத்தில் ஸ்ரீதேவி, ரஜினிகாந்த் மற்றும் கவுண்டமணி நடித்து இருந்தனர். இந்த படத்தில் ரஜினிகாந்த் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான் .ஆனால் கவுண்டமணியும் இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரஜினியுடன் சேர்ந்து கவுண்டமணியின் வில்லத்தனமான நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டது.
பொன்மனச் செல்வன்: நடிகர் விஜயகாந்த் நடிப்பில் உருவான திரைப்படம் தான் பொன்மனசெல்வன். இந்த படத்தில் ஷோபனா மற்றும் வித்யாஸ்ரீ போன்ற பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். கவுண்டமணி வில்லனாக நடித்திருப்பார். விஜயகாந்துடன் கவுண்டமணி வில்லனாக நடித்த முதல் திரைப்படம் இதுதான் .இந்த படத்தில் கவுண்டமணி வில்லத்தனமான நடிப்பு ரசிகர்களிடம் சிறிதளவு வரவேற்பை பெற்றது.
ரகசிய போலீஸ்: ரகசிய போலீஸ் திரைப்படத்தில் நடிகர் சரத்குமார் நடித்திருந்தார். இந்த படத்தில் கதாநாயகியாக ராதிகா நடித்திருந்தனர் .இதில் சரத்குமாருக்கு வில்லனாக கவுண்டமணி நடித்து இருந்தார் .இந்த படத்தில் கவுண்டமணியின் வில்லத்தனமான நடிப்பு ரசிகர்களிடம் பரவலாக பேசப்பட்டது.
இதனை தவிர பேர்சொல்லும்பிள்ளை, ஆவாரம் பூ, மற்றும் பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும் ,போன்ற படங்களிலும் கவுண்டமணி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.