டில்லியில் இன்று மாலை 4.30 மணியளவில் செய்தியாளர்களை தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா சந்திக்கிறார். அந்த சமயத்தில் தமிழ்நாடு, அசாம், புதுச்சேரி, மேற்குவங்கம், கேரளா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதியை அறிவிக்க உள்ளார். தேர்தல் தேதி மட்டுமல்லாது தமிழகத்துக்கு எத்தனை கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது, பிற மாநிலங்களுக்கு எத்தனைகட்ட தேர்தல் உள்ளிட்ட பல தகவல்கள் இன்று வெளியாக உள்ளது.
இன்று மாலை தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வர உள்ளது. இன்று மாலை 4.30 மணிக்கு தேர்தல் ஆணையம் டில்லி செய்தியாளர் சந்திப்பில் தேர்தல் தேதி அறிவிக்க உள்ளது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.