சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்கும் அண்ணாத்த திரைப்பட சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த. சுமார் 75 சதவீதம் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாக கூறப்படுகிறது. கொரோனா பொது முடக்கம் காரணமாக அண்ணாத்த சினிமா படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டது. இதற்கிடையே கடந்த டிசம்பர் மாதம் லாக்டெளன் விதிமுறைகளுடன் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது.
அப்போது படப்பிடிப்பில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து அது தள்ளிவைக்கப்பட்டது.
இந்த நிலையில் அண்ணாத்த படம் நவம்பர் 4-ம் தேதி வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. நவம்பர் 4-ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அண்ணாத்த வெளியாவதால் ரசிகர்கள் குஷி ஆகியுள்ளனர்.