ஈஷா யோகா மைய சத்குரு ஜக்கி வாசுதேவ் தனது ட்விட்டர் பக்கத்தில், “11,999 கோவில்கள் ஒரு கால பூஜைகூட நிகழாமல் அழிந்து வருகின்றன. 34,000 கோவில்கள் 10,000க்கும் குறைவான வருட வருவாயுடன் போராடுகின்றன. 37,000 கோவில்களில் பூஜை, பராமரிப்பு, பாதுகாப்பிற்கு ஒருவர் மட்டுமே உள்ளார். கோவில்களை பக்தர்களிடம் விடுங்கள். தமிழக கோவில்களை விடுவிக்கும் நேரமிது. கிழக்கிந்திய கம்பெனி நம் நாட்டு செல்வத்தை திருடியதோடு, கோவில்களை கையகப்படுத்தியதால் நம் ஆன்மீகத்தையும் அடக்கி ஒடுக்கினர். அரசாங்கம் கோவில்களை நிர்வகிக்க வேண்டுமென்றால், அவர்கள் தாங்கள் செய்வது மக்களாட்சி அல்ல, இறையாட்சி என அறிவிக்க வேண்டும்” என பதிவு செய்திருந்தார்.
இதை ரீ ட்விட் செய்த நடிகர் சந்தானம், “சத்குரு ஜக்கி வாசுதேவின் கருத்தை முற்றிலும் ஏற்கிறேன். பக்தர்களிடம் விட்டுவிடுங்கள். ஏராளமான கோயில்களில் ஒருவேளை பூஜை கூட நிகழாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது. பராமரிப்பும் பாதுகாப்பும் ஓரளவுதான் செய்யப்பட்டுள்ளன” என்று பதிவிட்டுள்ளார். ஜக்கி வாசுதேவ் இப்போது கோயில்கள் குறித்து அடிக்கடி ட்விட்டரில் பதிவிடுவது வழக்கமாக உள்ளது.