தமிழ்த்திரையுலகில் தனக்கென தனி இடத்தைப் பிடித்திருக்கும் வெகுசில நடிகர்களில் ஆக்ஷன் கிங் அர்ஜூனும் ஒருவர். வயதானாலும் ஆக்ஷன்காட்சிகளில் இன்றும் நடிகர் அர்ஜூனே கோலோச்சுகிறார்.
அர்ஜூனின் தந்தை கே.ஜி.ராமசாமி என்ற சக்திபிரசாத் கன்னடத் திரையுலகில் பிரசித்திபெற்ற நடிகர் ஆவார். ஆக்சன் கிங் அர்ஜூனைப் பொறுத்தவரை நடிகர் மட்டுமல்ல, சிறந்த இயக்குனரும்கூட. அதிலும் அவரது படங்களில் தாய்நாட்டுப்பற்று கொஞ்சம் தூக்கலாக இருக்கும். கராத்தேயிலும் பிளாக் பெல்ட் பெற்றிருக்கும் ஆக்சன் கிங் 90 களில் பிஸியான நடிகராக வலம்வந்தார்.
ஆக்ஷன்கிங் அர்ஜூன் இப்போது சென்னையில் ஒருநாள் 2 படத்தை இயக்கிய ஜான்பால்ராஜின் இயக்கத்தில் ப்ரண்ட்ஷிப் என்னும் படத்தில் நடித்துவருகிறார். இதில் பிக்பாஸ் புகழ் லாஸ்லியா, பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங் ஆகியோர் முக்கியப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.அர்ஜூனுக்கு மொத் தம் இரண்டு மகள்கள். இதில் மூத்தவர் ஐஸ்வர்யா தமிழ்ப்படங்கள் சிலவற்றில் நாயகியாக நடித்துள்ளார்.
ஆக்ஷன் கிங் அர்ஜீனின் சகோதிரி மகள் துருவ சார்ஜா ‘செம திமிரு’ என்னும் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். அதன் செய்தியாளர்கள் சந்திப்பில் தேசபக்தி அதிகம் கொண்ட நீங்கள் ஏன் அரசியலுக்கு வரக்கூடாது என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அர்ஜூன், சினிமாவில் ஒருநாள் முதல்வர் ஆவது ஈஸி. அரசியலில் வர நிறைய அறிவு வேண்டும். எனக்கு அந்த அளவுக்கு அறிவு கிடையாது.’என்றார்.