மேஷம்
உங்கள் செயலில் வேகம் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்கள் உங்கள் பாதுகாப்பாக இருப்பார்கள். நெடுநாட்களாக காத்துக் கொண்டிருந்த விஷயம் இன்று நடைபெறும். வியாபாரத்தை பெருக்குவதுப் பற்றி யோசிப்பீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களை பாராட்டுவார் .
ரிஷபம்
ரிஷப ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் அதிரடி மாற்றம் உண்டாகும் நாள். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். எதிர்பாராத சந்திப்புகள் ஏற்படும். வெளிவட்டாரத்தில் உங்களுடைய மதிப்பு அதிகரிக்கும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் உங்களை அனுசரித்துச் செல்வார்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகள் உங்களைத் தேடி வரும்.
மிதுனம்
மிதுன ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் பொறுமை தேவைப்படும் நாள். சந்திராஷ்டமம் இருப்பதால் சிக்கனமாக செயல்பட வேண்டும். அத்தியாவசிய செலவுகளை கம்மி பண்ணி கொள்வது நல்லது. பிள்ளைகளின் வருங்காலம் பற்றி சிந்திப்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள்.
கடகம்
கடக ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சியான நாள். கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து வந்து போகும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் மேலதிகாரி உங்களுடைய முடிவுக்கு ஆதரவு அளிப்பார்.
சிம்மம்
சிம்ம ராசி நேயர்கள் இன்றைய நாள் தொட்டது எல்லாம் துலங்கும் நாள். குடும்பத்தில் உங்களுடைய மதிப்பு அதிகரிக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உங்களுடன் நட்பாக பழகுவேன். பொது காரியங்களில் அதிகமாக கவனம் செலுத்துவீர்கள். காணாமல்போன பொருட்கள் ஒன்று இன்று கிடைக்கும். வியாபாரத்தில் புதிய உத்திகளை தெரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கும் நெருக்கமாக பழகுவீர்கள்.
கன்னி
கன்னி ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் கனவு நனவாகும் நாள். வருங்காலத் திட்டத்தில் ஒன்று இன்று நடைபெறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். உங்களை சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை அறிந்துகொள்வீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுக நிகழ்ச்சி அடைவீர்கள். முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.
துலாம்
துலாம் ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்த்த விஷயம் ஒன்று இன்று தள்ளிப்போகும்.வேலைப்பளு அதிகரிக்கும். பணப்பற்றாக்குறை ஏற்படும்.தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். புது வேலை வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் மன நிம்மதி நிலவும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நேயர்களுக்கு நினைத்ததை முடிக்கும் நாள். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். சொந்த பந்தங்கள் சிலர் உங்களுக்கு உதவி செய்வார்கள்.
புது வாகனம் வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள். உத்தியோகத்தி ல் உயரதிகாரி உங்களை பாராட்டுவார்.
தனுசு
தனுசு ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் திடீர் திருப்பம் ஏற்படும் நாள். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். பாதியில் நின்ற வேலைகள் முடிவுக்கு வரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நேர்மறையான எண்ணம் உருவாகும்.
மகரம்
மகர ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் நிதானம் தேவைப்படும் நாள். ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எந்த காரியத்தை தொட்டாலும் வெற்றி பெறும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் அதிகரிக்க செய்வீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்.
கும்பம்
கும்பராசி நேயர்களுக்கு இன்றைய நாள் விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். குடும்பத்தில் சின்ன,சின்ன வாக்குவாதங்கள் வந்து வந்து போகும். சகோதர வகையில் அலைச்சல் ஏற்படும். திடீர் பயணங்கள் ஏற்படும். வியாபாரத்தில் பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் கவனம் செலுத்துவீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும்.
மீனம்
மீன ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் உத்தியோகத்தில் கை ஓங்கும் நாள். குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும். பழைய கடன் பிரச்சினைகள் தீரும். கல்யாண முயற்சிகள் நடைபெறும். பொதுக் காரியங்களில் கவனம் செலுத்துவீர்கள். உங்களால் பயனடைந்தவர்கள் உங்களை சந்திப்பார்கள். புது வாகனம் வாங்குவது பற்றி யோசிப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர புது சலுகைகளை அறிவிப்பீர்கள்.