மேஷம்
மேஷ ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் புதியபாதை தோன்றும் நாள். உணர்ச்சிப்பூர்வமாக பேசுவதை விட்டுவிட்டு அறிவுபூர்வமாக பேசுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பதன் மூலம் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளால் மதிப்பு அதிகரிக்கும். கோவில் சென்று மனநிம்மதி அடைவீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் நடைபெறும் அலுவலகத்தில் நிம்மதி ஏற்படும்.
ரிஷபம்
ரிஷப ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் பொறுமை தேவைப்படும் நாள். சந்திராஷ்டமம் இருப்பதால் வேலைச்சுமை அதிகரிக்கும். மனச்சோர்வு ஏற்படும் சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது மிகவும் நல்லது. லேசாக தலைவலி ஏற்படும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பேசுவீர்கள். உத்தியோகத்தில் யாரையும் நம்ப வேண்டாம்.
மிதுனம்
மிதுன ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் தன்னம்பிக்கை ஏற்படும் நாள். புத்துணர்வுடன் விசேஷங்களில் கலந்து கொண்டு மன மகிழ்ச்சி அடைவீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். மனைவி வழியில் ஆதரவு கிடைக்கும். வாகனத்தைச் சரி செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை மாற்றிவிட்டு புதிய வேலையாட்களை சேர்த்துக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்களது திறமை வெளிப்படும்.
கடகம்
கடக ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் அமோகமான நாள். குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து செய்து காட்டுவீர்கள். உடன்பிறந்தவர்களால் உதவி கிடைக்கும். சில வேலைகளை விட்டுக்கொடுத்து முடிப்பீர்கள். அனுபவம்மிக்க வேலையாட்களை சேர்த்துக்கொள்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில தந்திரங்களை சொல்லிக் கொடுப்பார்.
சிம்மம்
சிம்ம ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் நினைத்தது நிறைவேறும் நாள். புதிய சிந்தனைகள் மனதில் எழும். பிள்ளைகளால் மன மகிழ்ச்சி அடைவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனை ஒன்று நிறைவேறும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் அதிகரிப்பர். உத்தியோகத்தில் சலுகைகள் கிடைக்கும்.
கன்னி
கன்னி ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் தேவைகள் பூர்த்தியாகும் நாள். எதிர்ப்புகள் அடங்கும். தாய்வழி உறவினர்களால் கருத்து வேறுபாடு ஏற்படும். பழைய கடனைப் பற்றி யோசிப்பீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரர்களை சேர்த்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சில தந்திரங்களை தெரிந்து கொள்வீர்கள்.
துலாம்
துலாம் ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் தைரியம் அதிகரிக்கும் நாள். துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பூர்வீக சொத்து ஒன்று கிடைக்கும்.வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வதன் மூலம் லாபம் இரட்டிப்பாகும். உத்தியோகத்தில் மேலதிகாரி உங்களிடம் முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் அதிரடி மாற்றம் ஏற்படும் நாள். குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மன மகிழ்ச்சி அடைவீர்கள். எதிர்பார்த்த வேலைகளை செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகளை வசூல் செய்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார்.
தனுசு
தனுஷ் ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் தன்னம்பிக்கை தேவைப்படும் நாள். ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஒரே நேரத்தில் இரண்டு மூன்று வேலைகளை செய்ய வேண்டிவரும். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி தருவார்கள். உத்யோகத்தில் மறதியால் பிரச்சினைகள் ஏற்படும்.
மகரம்
மகர ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் தடைகளைத் தாண்டி முன்னேற்றம் காண வேண்டிய நாள். குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து போகும். சாலையில் கவனத்தோடு செல்வது நல்லது. அரசு விவகாரங்களில் அலட்சியமாக இருக்க வேண்டாம். வியாபாரத்தில் போராடி லாபம் காண்பீர்கள் உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் பிரச்சனை ஏற்படலாம்.
கும்பம்
கும்பராசி நேயர்களுக்கு இன்றைய நாள் பெருந்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டிய நாள். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் உங்களது அந்தஸ்து உயரும். பழைய பிரச்சனைகளை தீர்த்து முடிவு காண்பீர்கள். வீட்டை அழகுபடுத்துவது பற்றி யோசனை செய்வீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்களை பாராட்டுவார்.
மீனம்
மீன ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் முயற்சிகள் நடைபெறும் நாள். கடந்த கால சுகமான அனுபவங்களை நினைத்து மன மகிழ்ச்சி அடைவீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வந்து பேசுவார்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரி உங்களுக்கு முக்கிய பொறுப்பை கொடுப்பார்.