துள்ளுவதோ இளமை திரைப்படத்தில் துரு, துரு இளைஞராக அறிமுகம் ஆகி ஹிட் அடித்தவர் தனுஷ். ஹாட்ரிக் வெற்றியைக்கொடுத்து தமிழ் சினிமாவுக்குள் எண்ட்ரி ஆன தனுஷ் அண்மையில் அசுரனில் நடிப்பு அசுரனாகவே மாறிப்போனார். என்ன மாதிரி பசங்களை எல்லாம் பார்த்த உடனே பிடிக்காது. பார்க்க, பார்க்கத்தான் பிடிக்கும் என சுமார் மூஞ்சியை அவரே கேலி செய்துகொண்டாலும், இன்றைய இளம் நடிகர்களில் அதிக ரசிகர்கள் படை கொண்டவராக இருக்கிறார் தனுஷ்.
இப்போது தனுஷ் ஹாலிவுட் படம் ஒன்றிலும் நடிக்கிறார். கடந்த ஆண்டு வேல்டுவைடு ஆடியன்ஸால் கொண்டாடப்பட்ட படம் ‘அவெஞ்சர்ஸ் எண்டு கேம்’ ஜோ ரூஸ்லோவும், அந்தோணி ரூஸ்லோவும் இந்தப்படத்தை இயக்கினர். இந்தக்கூட்டணி இப்போது நெட்பிளிக்ஸிற்காக ‘The Gray Man’ என்னும் படத்தை இயக்குகின்றனர். மார்க் கிரீனி என்னும் எழுத்தாளரின் நாவலை மையப்படுத்திய கதை இது. முதலில் சோனியோடு சேர்ந்து செய்வதாக இருந்த இந்தப்படம் நெட்பிளிக்ஸ் தயாரிப்புக்கு சென்றுள்ளது.
இந்தப்படத்தில் ரையன் காஸ்லிங், கிறிஸ் எவன்ஸ், அனா சீ அர்மாஸ் ஆகிய பிரபலங்கள் நடிக்கும் இந்தப்படத்தில் தனுஷ்ம் இருக்கிறாராம். வாரேவாவ்…தனுஷ் ரசிகர்களுக்கு இது சர்க்கரை பொங்கல் தானே?