நாட்டையே உலுக்கிய ஹாத்ரஸ் சம்பவத்தில் சி.பி.ஐ நான்குபேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் பகுதியில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த செப்டம்பர் மாதம் 14ம் தேதி நான்குபேரால் பாலியல் வன்மத்துக்கு ஆளானார். டில்லி மருத்துவமனையில் சிகிட்சையில் இருந்த அந்தப்பெண் 29ம் தேதி உயிர் இழந்தார். இவ்வழக்கை சி.பி.ஐ விசாரித்து வந்தது. இவ்வழக்கில் தொடர்புடைய நான்குபேர் தற்போதுவரை நீதிமன்ற காவலில் உள்ளனர். இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நான்குபேருக்கும் தடயவியல் பரிசோதனையும் நடத்தப்பட்டது.
உயிர் இழந்த பெண்ணின் குடும்பம், சிகிட்சையளித்த மருத்துவமனை ஆகியோரிடமும் விசாரணை நடத்தி முடித்திருக்கும் சிபிஐ ஹாத்ரஸில் உள்ள நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. இதில் நான்குபேரும் கற்பழித்தது உறுதி செய்யப்ப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. பாலியல் வன்மம், கொலை, வன்கொடுமை சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யும் சூழல் இருப்பதாகவும், அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் இளம் பெண்ணின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.