கர்நாடகாவில் வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல், ஒரு வீட்டின் பின்புறம் வைத்திருந்த பாத்டப்பில் முங்கி குளித்து களைப்பைப் போக்கிக் கொண்ட காட்டுப் புலி குறித்தான வீடியோ வேறு ரகம்.
இந்தப் புலி குளியல் போடும் வீடியோவை, காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ், தனது ட்விட்டர் பக்கத்தில் பகிந்துள்ளார். ‘இது மிகவும் அரிதாக நடக்கும் நிகழ்வு. குடகுப் பகுதியில் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது’ என்று வீடியோவைப் பகிர்ந்து தகவல் தெரிவித்துள்ளார் ஜெய்ராம் ரமேஷ். இதற்கு நெட்டிசன்கள் ஆச்சரியத்தில் கமென்ட் பதிவிட்டு வருகிறார்கள்.
What an unusual occurrence. Apparently in Coorg. Received from a friend on WhatsApp. pic.twitter.com/C7yEF6fjAW
— Jairam Ramesh (@Jairam_Ramesh) December 7, 2020
பிரபல வாகன தயாரிப்பு நிறுவனமான மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, ஜெய்ராம் ரமேஷின் வீடியோவைப் பகிர்ந்து, ‘குடகில் இருக்கும் எங்களது வீட்டில்தான் எனது குழந்தைப் பருவத்தின் பெரும் பகுதியைக் செலவழித்தேன். நாகர்ஹோல் சரணாலத்திலிருந்து 6 மைல் தொலைவில்தான் எங்களது வீடு உள்ளது. ஆனால், எப்போதும் புலியை நேரில் பார்க்கும் அதிர்ஷ்டம் கிட்டயதில்லை. ஆனால், இந்தப் புலி ஏதோ ஒரு வீட்டின் பாத்டப்பை பயன்படுத்திக் குளியல் போடுகிறது’ என்று நெகிழ்ச்சியுடன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.