இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை தான் கீர்த்தி சுரேஷ் இதனை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன், விஜய்,சூர்யா , விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். கடந்த ஆண்டு சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றார் கீர்த்தி சுரேஷ்.

மேலும் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் அண்ணாத்த திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சமீபத்தில் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய நடிகை கீர்த்தி சுரேஷை பார்த்து பலரும் ஆச்சரியப்பட்டனர்.இந்த நிலையில் தற்போது அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு அவருடைய ரசிகர்கள் அதை மிக வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

அந்த புகைப்படத்தில் கருப்பு நிற உடை அணிந்து மேஜையில் ஒரு கப்புடன் போஸ் கொடுத்துள்ளார் கீர்த்தி சுரேஷ். அது போக அந்த கப்பில் எனக்கு மிகவும் பிடித்த நாள் இந்த நாள் என்ற வசனமும் இடம்பெற்றிருக்கிறது தற்போது இந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு அவருடைய ரசிகர்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றனர்.
