தி.மு.க தலைவர் ஸ்டாலின் திருத்தணியில் வேலுடன் போஸ் கொடுத்தது பல்வேறு விமர்சனங்களை கிளப்பியுள்ளது. இது பக்தர்களையும், மக்களையும் ஏமாற்றும் ஓட்டு அரசியல் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.இதுகுறித்து த.மா.க கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “வேலுக்கு பயபக்தியுடன் மரியாதை செலுத்துபவர்கள் தான் தேர்தலில் வெல்ல முடியும். தி.மு.க சூரசம்ஹாரத்தில் நம்பிக்கை உள்ளதாக கூறுவதே தேர்தலில் மக்களின் ஓட்டுக்காக தான்.
மக்களின் பக்தியை தேர்தலில் வாக்குக்காக யாரும் ஏமாற்றி விட முடியாது. மக்களிடம் மனுக்கள் பெற்று 100 நாட்களில் தீர்வு காணப்படும் என ஸ்டாலின் கூறுவது அரசியல் நாடகம். ஆக்கபூர்வமான நடவடிக்கையே மக்கள் எதிர்பார்க்கிறார்கள்” என்றார்.