உலகை மிரட்டும் உருமாறிய கொரோனாவால் பயண கட்டுப்பாடுகளை அதிகரித்துள்ளது லண்டன். இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாக பரவுகிறது. குறிப்பாக இன்று 55 ஆயிரம் பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ்ன் தாக்குதலுக்கு மேலும் 1,280 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன் காரணமாக பிறநாடுகளில் இருந்து இங்கிலாந்து வரும் பயணிகள் 10 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். இந்த கட்டாயத்தனிமைப்படுத்தல் கொரோனா வைரஸ் குறைவாக உள்ள நாடுகளில் இருந்து இங்கிலாந்து வருபவர்களுக்கு பொறுந்தாது என கொரோனா வைரஸ் குறைவாக உள்ள நாடுகளில் இருந்து இங்கிலாந்து வரும் பயணிகள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டியதில்லை என்ற நடைமுறை இருந்துவந்தது.

ஏற்கனவே நடைமுறையில் இருந்த கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள நாடுகளில் இருந்து வருபவர்கள் 5 நாட்களில் கொரோனா பரிசோதனை செய்து தங்களுக்கு கொரோனா இல்லை என்ற நெகட்டிவ் முடிவுடன் வர வேண்டும். அவ்வாறு கொரோனா பரிசோதனை செய்துகொள்ளவில்லை என்றால் அவர்களும் கட்டாயம் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.
18-ம் தேதி முதல் பிப்ரவரி 15-ம் தேதி வரை இந்த பயண கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.