அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சங்கரன் கட்டளை கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவருடைய வயது 39. இவர் நேற்று அவரது உறவினர் வீட்டு திருமண விழாவிற்காக குடும்பத்தோடு வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். மதியம் திரும்பி வந்து பார்த்த போது வீட்டில் இருந்த மேஜை டிராயர் பூட்டு உடைக்கப்பட்டு அதிலிருந்து ரூபாய் 20,000 திருடப்பட்டுள்ளது.

வீட்டின் வெளி கதவு பூட்டிய படி இறந்ததால் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர் மாடி வழியாக வீட்டுக்குள் வந்து திருடி இருக்கலாம் என்று ராமலிங்கம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ராமலிங்கம் அளித்துள்ள புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது இந்த சம்பவம் திருமானூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.