டிகிரி காபி என்றாலே கும்பகோணம் தான். அதன் சுவை நறுமணத்துடன் நம் மனதை வருடிச்செல்லும். மணமும் சுவையும் கலந்த கும்பகோணம் டிகிரி காபியை கும்பகோணம் செல்லாமல் வீட்டிலேயே ருசிக்கலாம்.
டிகிரி காஃபி போட என்னென்ன தேவை…
தெறிக்க வறுத்து அரைத்த புதிய காஃபி பவுடர் (சிக்கரி கலந்தது) 3 மேசைக் கரண்டி, பால் – ஒன்றரை கப், சர்க்கரை- அரை தேக்கரண்டி, தண்ணீர் – 1/2 கப்
சரிசெய்முறை பார்க்கலாம் வாங்க
தண்ணீரை அடுப்பில் வைத்து குமிழிகள் வரும்வரை கொதிக்கவிடவும். நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் மூன்று மேசைக் கரண்டி காபி பவுடரை பில்டரில் போட்டு கொண்டு மெதுவாக அழுத்தவும். உடனடியாக அதில் வெந்நீரை ஊற்றி முடவும்.

இப்போது அரை மணி நேரத்திற்குப் பின்பு ஸ்ட்ராங்கான டிகாஷன் தயாராகி இருக்கும். அதில் ஒன்றரை கப் பாலை தண்ணீர் சேர்க்காமல் கொதிக்க வைக்கவும். அரை கப் டிகாஷனை பித்தளை அல்லது சில்வர் தம்ளரில் விடுங்கள்.
அதில் முக்கால் கப் பாலும், தேவைக்கேற்ப சர்க்கரையும் சேர்த்து பித்தளை அல்லது சில்வர் டவராவில் நுரை பொங்க ஊற்றி கலக்கவும். கும்பகோணம் டிகிரி காபி தயார்.