தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் அரசியல் கட்சிகள் பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்து வருகின்றன. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு சங்கங்களில் உள்ள விவசாய நகைக்கடன்களை தள்ளுபடி செய்வதாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் கூறியிருந்தார். இந்த நிலையில் இன்று கூடிய சட்டசபை கூட்டத்தில் 110 விதியின் கீழ் வெளியிட்ட அறிவிப்பில். கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,110 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவித்துள்ளார். இதன் மூலம் 16.43 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவர் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், வேளாண்துறைக்கு அதிமுக அரசு முக்கயத்துவம் அளித்து வருவதாகவும்.
பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்றும். கொரோனா தொற்று மற்றும் புயலால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார். அதுமடுமல்லாது அதிமுக அரசு சொன்னதையும் செய்வோம், சொல்லாததையும் செய்வோம் என அதிரடியாக கூறினார் முதல்வர். கடந்த 2016-ம் ஆண்டில் விவசாயிகளின் கூட்டுறவு பயிர்க்கடன்களை தமிழக அரசு ரத்து செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.