மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக டில்லி எல்லையில் பல்வேறு பகுதிகளி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 65 நாட்களுக்கும் மேலாக இந்த போராட்டம் நீடித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 26-ம் தேதி டில்லியில் நடந்த விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் வன்முறை ஏற்பட்டது. இதையடுத்தி விவசாயிகளை போராட்ட களத்தில் இருந்து அப்புறப்படுத்தி வருகின்றனர் போலீஸார். ஆனாலும் பஞ்சாப், ஹரியாணா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்கிறார்கள்.
இந்த நிலையில் விவசாய சட்டங்களுக்கு எதிரான போராட்டத்துக்கு வீட்டிலிருந்து கட்டாயம் ஒரு நபர் வாரவேண்டும் என்று ல் பஞ்ஜாப் மாநிலம் பதிண்டா பகுதியிலுள்ள விர்க் குர்த் என்ற கிராமம் முடிவு செய்துள்ளது.
குடும்பத்திற்கு ஒரு நபர் கட்டாயம் வாரம் ஒருமுறை என்ற கணக்கில் விவசாயிகளின் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இல்லை என்றால்1500 ரூபாய் அபராதமாக விதிக்கப்படும் எனவும் அந்த கிராமம் முடிவு செய்துள்ளது.