மத்திய அரகு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக டில்லியில் விவசாயிகள் 50 நாளுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையின் இன்று டிராக்டர் பேரணி நடத்தினர். குடியரசு தின விழா முடிந்தபிறகு பகல் 11.30 மணிக்கு பேரணி துவங்கப்படும் என முதலில் அறிவித்தனர். ஆனால் காலை 9 மணியளவில் சிங்கு எல்லையிலிருந்து விவசாயிகள் டிராக்டர் பேரணியை தொடங்கினர். டில்லி -ஹரியானா எல்லைப்பகுதியான டிக்ரி பகுதியில் போலீசார் அமைத்த தடுப்புகளை டிராக்டர் பேரணியில் வந்தவர்கள் தகர்த்தனர் .
குடியரசு தினத்தில் நாட்டின் தலைநகரில் கிட்டத்தட்ட இரண்டு லட்சம் டிராக்டர்களுடன் பேரணி நடந்துவருவதால் பதற்றம் நிலவுகிறது. தொடர்ந்து போலீசார் விவசாயிகள் மீது கண்ணீர் புகை வீசி கலைத்தனர். மேலும் சில இடங்களில் தடியடியும் நடத்தப்பட்டது. விவசாயிகள் பேரணியும், அதைத் தொடர்ந்து போலீஸாரின் தடுப்பு நடவடிக்கைகளாலும் பதட்டமான நிலை ஏற்பட்டுள்ளது.