மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி சுமார் 50 நாட்களுக்கும் மேலாக டில்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
விவசாயிகளிடம் மத்திய அரசு எட்டு கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தின. ஆனாலும் அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இந்த நிலையில் இதுசம்பந்தமான வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம் மூன்று சட்டங்களுக்கும் இடைக்கால தடை விதித்தது. இருப்பினும் உச்சநீதிமன்றம் அமைத்த குழு மீது நம்பிக்கை இல்லை என விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்தனர். இதையடுத்து கடந்த 15-ம் தேதி ஒன்பதாம் கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. மத்திய அரசு, விவசாயிகள் இடையே டெல்லியில் நடைபெற்ற 9-ம் சுற்றுப் பேச்சுவார்த்தையயிலும் உடன்பாடு ஏற்படவில்லை. மேலும் 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவித்துள்ளனர். இதையடுத்து அடுத்தகட்ட பேச்சுவார்த்தை வருகிற 19-ம் தேதி நடைபெறும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.