சட்டசபையில் விதி 110ன் கீழ் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று வெளியிட்டார். அதில் கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் வாங்கியிருந்த 16.43 லட்சம் விவசாயிகளின் 12,110 கோடி கடனைத் தள்ளுபடி செய்து இருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

திமுக ஆட்சிக்கு வந்ததும் விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என மு.க.ஸ்டாலின் அறிவித்தார். ஆனால் அதற்கு முன்பே, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இந்த ஆட்சியிலேயே அதை ரத்து செய்து விட்டார். இதனால் ஏற்கனவே தன்னை விவசாயியாகவே முன்னிலைப்படுத்தும் எடப்பாடி பழனிச்சாமியின் இமேஜ் இதன் மூலம் மேலும் கூடியுள்ளது. இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சற்றுமுன் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவு போட்டுள்ளார்.

அதில், ‘’அதிகமாக நேசிப்பவனே அதிகமாக உதவி செய்பவன்! நானும் ஒரு விவசாயி. விவசாயிகளை அதிகமாக நேசிப்பவன்! வேளாண் பெருங்குடி மக்களின் இன்னலைத் தீர்ப்பதே எனது முதல் கடமை!’’என அதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.