இந்தியாவின் முதுகெலும்பு என்றால் அது விவசாயம்தான். ஆனால் இப்பொழுது நம் நாட்டில் உள்ள விவசாயிகள் அனைவரும் வீதியில் இறங்கி போராடிக் கொண்டிருக்கின்றனர்.
அப்படிப்பட்ட விவசாயிகளுக்கு தனியார் நிறுவனம் ஒன்று கைகொடுத்திருக்கிறது. அது நமது நாட்டின் முக்கியமான ஒரு நபரான முகேஷ் அம்பானியின் நிறுவனம் தான்.

ஆம்..கர்நாடகாவில் ரிலையன்ஸ் ரீட்டெய்ல் நிறுவனம் அதிக விலை கொடுத்து விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்திருக்கிறது. இதனால் ரிலையன்ஸ் நிறுவனம் போல் மற்றவர்களும் அதிக விலை கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.குறைந்தபட்ச விலைக்கு சட்டப்பூர்மான உத்தரவாதம் இல்லாத காரணத்தால் விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக ரிலையன்ஸ் ரீடெல் ஷாப் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.