மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய மோட்டோ ஜி பிளே 2021 ஸ்மார்ட்போனின் விவரங்கள் அனைத்தும் கூகுள் பிளே கன்சோலில் கசிந்துள்ளது.
மோட்டோரோலா மோட்டோ ஜி பிளே 2021 ஸ்மார்ட்போனின் விபரக்குறிப்பு அனைத்தும் கூகுள் பிளே கன்சோலில் பட்டியலிடப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் மற்றும் சிறப்பம்சங்களும் இப்போது தெரியவந்துள்ளது.
கூகுள் பிளே கன்சோல்ன் ப்ரதயேக தளத்தின்படி மோட்டோ ஜி பிளே 2021 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 450 பிராசஸர், அட்ரினோ 610 ஜிபியு, 6.5 இன்ச் 720×1600 பிக்சல் டிஸ்ப்ளே, 3 ஜிபி ரேம் வழங்கப்படும் என ஒரு தகவல் குறிப்பு சொல்கிறது. இது போக முன்புறம் நாட்ச் டிசைன் செல்பி கேமரா, பெசல்கள் காணப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போனின் பவர் மற்றும் வால்யூம் பட்டன்கள் யாவும் வலதுபுறத்தில் காணப்படுகிறது. தற்சமயம் பட்டியலிடப்பட்டு இருப்பது கோப்புப்படமாக்கூட இருக்கலாம் என சொல்கின்றனர். அந்தவகையில் மோட்டோ ஜி பிளே 2021 உண்மை தோற்றத்தில் சில வேறுபாடுகள் வேண்டுமானால் இருக்கலாம்.