நாட்டின் தலைநகரான டில்லியில் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்ற மாநில மற்றும் தேசிய கட்சிகளுக்கு அலுவலகம் கட்ட அரசு இடம் வழங்கியுள்ளது. அதில் அ.தி.மு.க-விற்க்கு என ஒதுக்கப்பட்ட இடத்தில் மிகப் பெரிய அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
அலுவலகத்திற்கான முழு வேலைகளையும் தம்பிதுரை முன்னின்று செயல்படுத்தியிருக்கிறார். கடந்த வாரம் டில்லி சென்று வந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அந்த அலுவலகத்தை பார்வையிட்டார். அவர் முதல்வராக இருக்கும்போதே அந்த அலுவலகத்தை திறக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி விரும்புவதால் விரைவில் டில்லியில் அ.தி.மு.க அலுவலகம் திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது