நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கப் போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்துவிட்டார். இருப்பினும் ரசிகர்கள் ரஜினி தனது முடிவை மாற்ற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ளவர்கள் எந்த கட்சியில் வேண்டுமானாலும் சேரலாம் என ரஜினி மக்கள் மன்றம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி வி.எம்.சுதாகர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ளவர்கள் ஏதேனும் அரசியல் கட்சியில் இணைந்து செயல்பட விரும்பினால், ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு, அவர்கள் விருப்பம் போல் எந்த கட்சியில் வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம். அவர்கள் வேறு கட்சிகளில் இணைந்தாலும், அவர்கள் எப்போதும் நம் அன்பு தலைவரின் ரசிகர்கள் தான் என்பதை ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்கள் யாரும் மறந்து விடக்கூடாது” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.