சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து வருகின்ற சிறப்பு விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வருவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அவரது உத்தரவின் பேரில், சுங்க இலாகா அதிகாரிகள் சிங்கப்பூரில் இருந்து வரும் சிறப்பு விமானத்தில் வந்த பயணிகளை கண்காணித்து வந்தனர். அப்போது ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்த சிவசங்கர் ரெட்டி (வயது 34) என்பவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரணை செய்தனர். முன்னுக்கு பின் முரணாக அவர் பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர் அப்போது, தானியங்கி துளை போடும் கருவி இருந்தது. அவற்றை பிரித்து பார்த்தபோது, அதில் ரூ.8 லட்சம் மதிப்புள்ள 160 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

அதேபோல், துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த நசரூல் ஹக்கீம் (23) என்பவரின் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்துள்ளனர். இவரிடம் இருந்து ரூ.22 லட்சம் மதிப்புள்ள 440 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள். 2 பேரிடம் ரூ.30 லட்சம் மதிப்புள்ள 600 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்து சுங்க இலாகா அதிகாரிகள், 2 பேரிடம் தற்போது திவிரமாக விசாரித்து வருகின்றனர்