தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
கடந்த பொங்கலன்று இவர் நடிப்பில் வெளியான “தர்பார்” வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.அதனைத் தொடர்ந்து தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில் “அண்ணாத்த” என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இந்தப் படத்தினுடைய மோஷன் போஸ்டர் வெளியானதுமே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பும் அதிகரித்தது. இந்தப் படத்தினுடைய படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்தப் படத்தினுடைய படப்பிடிப்பு இடைக்காலமாக நின்றுபோனது.
அதன் பிறகு மெல்ல மெல்ல ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்தால் தான் நான் படத்திற்கு நடிக்க வருவேன் என்று கூறியதாகத் தெரிகிறது. அதன்பிறகு சமீபத்தில் நான் மீண்டும் படத்தில் நடிக்க வருகிறேன் என்று அவரே அறிவித்தார்.இந்த நிலையில் நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தின் எஞ்சியுள்ள படப்பிடிப்பை முடிப்பதற்காக தனி விமானத்தில் ஹைதராபாத் சென்றுள்ளார். விமான நிலையத்தில் அவர் புறப்பட்டு செல்வது போல இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாக வந்தது.
இந்த நிலையில் விமானத்தினுள் ரஜினிகாந்தின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக கேக் வெட்டும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.தற்போது இந்த வீடியோ தான் சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.