இந்து கடவுள்களை தவறாக பேசுவதும், பின்னர் எதிர்பு கிளம்பினால் விளக்கம் அளிப்பதும் வி.சி.க தலைவர் திருமாவளவனுக்கு வாடிக்கை. இப்போது விநாயகர் பற்றி பேசி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
தைப்பூச விழாவிற்கு விடுமுறை விட்டதை விமர்ச்சிக்கும் விதமாக திருமாவளவன் பேசுகையில், “முருகனை தமிழ் கடவுள் என்கிறார்கள். ஆனால் சனாதனத்தில் இருந்து அவரை எப்படி தனித்து பிரித்துப் பார்க்க முடியும். விநாயகர், முருகனுக்கு அண்ணன் என்றால் நிச்சயமாக அவரும் தமிழ் கடவுளாகத்தானே இருக்க முடியும்? ஆனால் விநாயகரை நாம் ஏன் தமிழ் கடவுள் என்று சொல்லவில்லை? ஒரே பெற்றோருக்கு பிறந்த இருவரில் முருகன் தமிழ் கடவுள், விநாயகர் இந்திக் கடவுளா? இது எப்படி சாத்தியம்?

முருகனை மட்டும் தமிழ் கடவுள் என்று சொல்லி, தைப்பூசத்திற்கு விடுமுறை அறிவித்துவிட்டால், நாம் அனைவரும் தமிழர்கள் என தலைநிமிர்ந்து விடுவோமா?” என பேசியுள்ளார். அவரது கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பா.ஜ.க-வின் கலை இலக்கியம் மற்றும் கலாசாரப் பிரிவின் தலைவரான நடிகை காயத்ரி ரகுராம்,”செத்த பாம்பை மீண்டும் மீண்டும் அடிக்க விரும்பவில்லை. எப்போதும் அவரது பேச்சு அசுத்தமானது என்பதை நாம் அனைவரும் அறிவோம். அவர் கர்மாவை எதிர்கொள்வார், நான் அதை கடவுளிடம் விட்டுவிட விரும்புகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.