தமிழக முன்னாள் முதக்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா. இவர் அ.ம.மு.க கட்சியின் பொதுச் செயலாளராகவும் உள்ளார். சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கிறார் சசிகலா. நான்கு ஆண்டு சிறைத்தண்டனை முடிவடைந்த நிலையில், அபராத தொகையையும் சசிகலா செலுத்திவிட்டார். இந்த நிலையில் வரும் 27-ம் தேதி விடுதலை ஆகிறார் சசிகலா. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை கர்நாடகா சிறைத்துறை வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் சசிகலாவுக்கு இன்று (ஜனவரி-20) காலை அதிக காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சிறையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சசிகலாவுக்கு 4 பேர் கொண்ட டாக்டர் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். விடுதலை ஆக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் சசிகலாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டிருப்பது அவரது ஆதரவாளர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது