சினிமாவில் இன்று தவிர்க்க முடியாத நடிகராகவும், முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் ஹீரோ மற்றும் வில்லன் ஆகிய கதாபாத்திரங்களில் நடித்து கலக்கி வருகிறார்.
ஆரம்ப நாட்களில் இவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்த படங்களில் ஒன்று “இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா” இந்த படத்தில் இடம் பெற்ற வசனங்கள் ,காட்சிகள் மட்டுமில்லாமல் இந்த படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை இயக்குனர் கோகுல் இயக்கி இருந்தார். அதன்பின்னர் இந்த கூட்டணி ஜூங்கா படத்திலும் இணைந்து கலக்கியது. அந்த லிஸ்டில் கோகுல் ரெடி செய்துள்ள படம்தான் கொரோனா குமார். இந்தப்படத்தை சதீஷ் தயாரிக்க உள்ளார்.

இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் பற்றி விவரம் இன்னும் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை.இந்நிலையில் இந் தப் படத்தின் கதையை கேட்ட பின்பு சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை சிரிப்பு கலவரம்… இப்படத்தை வெள்ளித் திரையில் பார்க்க மிக ஆர்வமாக இருக்கின்றேன் ஆல் தி பெஸ்ட் என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் மாஸ்டர் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

விஜய் சேதுபதிதான் ஹீரோ என்று ஒரு சிலர் கூறி வருகின்றனர். ஆனால் மற்றொரு தரப்பு விஜய்சேதுபதி கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளார் ரோபோ சங்கர் தான் ஹீரோ என்று கூறுகின்றனர்.