தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம்தான் “மாஸ்டர்”. இந்த படத்தின் ரிலீஸிற்காக விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி திரையரங்க உரிமையாளர்களும் பல மாதங்களாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
மேலும் “மாஸ்டர்”படத்துக்குதான் தியேட்டர்களில் அதிக முன்னுரிமை என்பது தெளிவாக தற்போது தெரிந்து விட்டது.இந்த நிலையில் நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள “ஈஸ்வரன்” படத்தை பொங்கலன்று வெளியிடுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அதாவது பல மாதங்களாக விஜய் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் “மாஸ்டர்” படம் பொங்கலன்று வெளியிடுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. மேலும் தமிழகத்தின் பெரும்பாலான திரையரங்குகளில் “மாஸ்டர்” படம் திரையிடப்படும் என்றும் கூறப்படுகிறது.இதற்கான முக்கிய காரணம் காத்திருப்பும் அதிக முதலீடும் தான் என்றும் கூறப்படுகிறது.
இந்த முடிவால் ஈஸ்வரன், சுல்தான் போன்ற படங்கள் பொங்கல் தினத்தன்று வெளியாகாமல் பின்வாங்க அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.ஆனால் “ஈஸ்வரன்” படக்குழுவினர் பொங்கல் அன்றுதான் படத்தை வெளியிடுவோம் என்று அவர்கள் எடுத்த முடிவில் உறுதியாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் ஜனவரி 13-ஆம் தேதியே “மாஸ்டர்” திரைப்படம் ரிலீசாக உள்ளது.ஆனால் ஜனவரி 15ஆம் தேதி “ஈஸ்வரன்” படத்தை வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது எது எப்படியோ மாஸ்டர் படம் ரிலீசான சரி என்று விஜய் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.