கடந்த மாதம் அமெரிக்காவின் அதிபர் தேர்தல் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து
ஜோ பைடன், அமெரிக்காவின் 46 ஆவது அதிபராகப் பதவியேற்றார். கொரோனா பரவல் காரணமாகப் பலத்த பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடுகளுடன் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதனால் மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே வெளிநாட்டுப் பிரமுகர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இந்தியா சார்பில் அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரஞ்சித் சிங் சந்து கலந்துகொண்டார். புதிதாகப் பதவியேற்ற அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் இணைந்து பணிபுரிய ஆர்வமாக உள்ளதாக அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரஞ்சித் சிங் சந்து தெரிவித்துள்ளார். இதுபோக உலகெங்கிலுமிருந்து புதிய அதிபர் ஜோ பைடனுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.