சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக நடந்த இரண்டாவது தேசிய இளையோர் நாடாளுமன்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் கலந்துகொண்டு உரையாற்றினார்.

அப்போது பிரதமர் நரேந்திரமோடி பேசுகையில், “குடும்ப பெயர்கள் அடிப்படையாக வைத்துக் கொண்டு அரசியலில் வெற்றிபெறுபவர்களின் அதிஷ்டம் குறைந்து வருகிறது என்பது எதார்த்தமான உண்மை. பரம்பரை பரம்பரையாக தொடரும் வாரிசு அரசியல் ஜனநாயகத்தின் மிகப் பெரிய எதிரி. ஜனநாயகத்தில் புரையோடிப்போயுள்ள வாரிசு அரசியல் என்னும் நோய் இன்னும் முழுமையாக அகற்றப்படவில்லை.
வாரிசு அரசியல் என்பது ஜனநாயகத்தில் புதுவிதமான சர்வாதிகாரப் போக்கை வளர்த்தெடுக்கிறது. இளைஞர்கள் அதிகமாக அரசியலில் ஈடுபடாமல் இருந்தால் வாரிசு அரசியல் என்ற விஷம் தொடர்ந்து ஜனநாயகத்தை பலமிழக்கச் செய்யும்” என்றார்